இந்த 2023-ஆம் ஆண்டு நடந்த பேரழிவில் ஒன்று துருக்கியிலும், சிரியாவிலும் ஏற்பட்ட நிலநடுக்கம். நிலநடுக்கத்தால் பிரம்மாண்டமான கட்டிடங்கள் மண்ணோடு மண்ணானது. தூங்கிக் கொண்டிருந்தபோதே துருக்கி மக்கள் பலர் இறந்துவிட்டனர். துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் துர்நாகி என்ற நகரத்திலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் காசினா டெத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது.

அதன் பிறகு 15 நிமிடங்களில் இருந்து சிறிய தூரத்தில் 6.7 லிட்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சப்தம் கேட்டு எழுந்தவர்கள் உயிர்பிழைப்பதற்காக வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் புகுந்தனர். அந்த நில நடுக்கம் தேசிய பேரழிவாக அறிவிக்கப்பட்டது. பல மணி நேரமாக மீட்பு பணிகள் நடந்தது. தோண்ட தோண்ட எங்கு பார்த்தாலும் மக்களின் சடலங்கள் தென்பட்டது. கடந்த 84 வருடங்களில் இது மோசமான பேரிடர் என துருக்கிய அதிபர் கூறினார்.

இதே போல சிரியா எல்லையை ஒட்டி தென்கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 2,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சிரியா, துருக்கி, லெபனான், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர். துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஐக்கிய நாடுகள் பொது அவை கூட்டத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. துருக்கி வரலாற்றிலேயே அது மிகப்பெரிய நிலநடுக்கமாக இருந்தது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.