
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றிலே அதிக வெள்ளம் வந்த காரணத்தினால்…. அதிக மழைப்பொழிவு திருநெல்வேலி ஏற்பட்டதால் எட்டு பேர் உயிரிழந்ததாக தெரிகிறது. அந்த எட்டு பேர் குடும்பத்திற்கும், அவர்கள் வாழ்வாதாரரை முன்னிட்டு ஒவ்வொருவருக்கும் 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டை இந்த அரசு தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
அதேபோல சாலை, தகவல் தொழில்நுட்பம் எல்லாம் துண்டிக்கப்பட்டுள்ளது. எங்கு சென்றாலும் தகவல் கிடைக்கவில்லை…. சாலைகள் துண்டிக்கப்பட்டு இருக்கிறது சீர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றார்கள். ஆகவே இந்த அரசு உடனடியாக சாலையை சீர் செய்ய வேண்டும். தகவல் தொழில்நுட்ப தொடர்பை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொண்டுள்கின்றேன்.
அதேபோல ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் ரயிலில் சென்று கொண்டிருக்கும்போது கனமழையால் அங்கங்கே நிறுத்தப்பட்டு விட்டார்கள். சுமார் 1000 பேர் ரெயிலில் பயணம் செய்திருக்கின்றார்கள். அவர்களுக்கு தேவையான உணவு, அங்கிருந்து அவர்கள் செல்கின்ற பகுதிகளுக்கு வாகன வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகின்றேன்.