
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும், மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனரும், பொதுச் செயலாளருமான சரத்குமார் கலந்து கொண்டார். இதில் பேசிய அ.இ.ச.ம.க-வின் மாணவரணி துணைச் செயலாளர் நட்சத்திர வெற்றி,
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கொண்டிருக்கும் அண்ணன் சுந்தர் அவர்களே…. அண்ணன் சுந்தர் அவர்களை பற்றி சொல்லனும்னா….. ஒரு சில வார்த்தைகள் சொல்லி முடித்துவிடுவேன். ஏனென்றால் அவரோடு குறைந்தபட்சம் பணியாற்றி இருக்கேன். அதிகபட்சம் பணியாற்றி இருப்பேன்னு நினைக்கிறேன். அவர் கூட இருந்த நங்கள் எல்லாருமே சாதாரண தொண்டர்கள் தான்…. யாரும் விவரம் தெரிஞ்ச ஆளுக எல்லாம் கிடையாது.. மிக மிக சாதாரண தொண்டர்களை வைத்து, இவ்வளவு பிரமாண்ட கூட்டத்தை நடத்த முடியும் ஆனால்,
அது எங்களுடைய மாநில துணைப் பொதுச் செயலாளர்… தென்மண்டல தளபதி அண்ணன் சுந்தரால் மட்டும்தான் முடியும் என்பதை இந்த நேரத்தில் ஆணித்தனமாக தெரிவித்துக் கொள்கிறேன். அதற்கு காரணம் எங்க தலைவருடைய அணு அணுவான அசைவுதான். நாங்க பார்க்கும்போது…. சுந்தர் அண்ணன் பேசும்போது சொல்லுவாங்க…. என்ன நடக்கு ? அதைவிட தலைவர் என்ன சொல்லுவாரு… நேரடியாகவே தலைவர் பேசுறது… என்ன நடந்தாலும் அனைத்துமே தலைவருடைய கண் அசைவில் மட்டுமே நடந்தது என்பதை எனக்கு தெரிந்ததை நான் சொல்கிறேன்.
ஒரு சின்ன வார்த்தை மட்டும் சொல்லி இந்த வரவேற்புரையை நிறைவு செய்ய ஆசை பாடுகின்றேன். சமகால கால உலகில் பார்த்தீர்கள் என்றால் ? திராவிடத்திற்கு இரண்டு குறைகளை சொல்லலாம். ஒன்னு வேங்கைவயல்…. இன்னொன்னு அது என்னென்னெ தெரியாது. நான் டிவியில் பார்த்து தெரிந்து கொண்ட தூத்துக்குடி துப்பாக்கி சூடு கலவரம். அதே மாதிரி மத்தியில ஆளக்கூடிய தேசியத்துக்கு பாத்தீங்கன்னா…..
காங்கிரஸ் எடுத்துக்கிட்டீங்கன்னா…. நம்முடைய தொப்புள் கொடி உறவுகள் கொல்லப்பட்ட இலங்கைத் தமிழர் படுகொலை… அதே மாதிரி பாஜகவுக்கு மணிப்பூர். தேசியத்தையும், திராவிடத்தையும் கருவறுத்து சமத்துவத்தை படைக்க வரலாற்று நாயகன் எங்கள் அண்ணன்…. நாளைய முதல்வர்.. சரத்குமாரை அன்புடன் வரவேற்று வரவேற்புரையை முடிக்கிறேன் என்று பேசினார்.