
வேலூர் மாநகராட்சியில் தினமும் பிளாஸ்டிக் எலக்ட்ரானிக், தெர்மாகோல், கண்ணாடி உள்ளிட்ட 200 டன்களுக்கும் மேல் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக், தெர்மாகோல் கழிவுகளை பெரிய பொருட்களாக பயன்படுத்திக் கொள்வதாக சிமெண்ட் சாலைகள் தெரிவித்ததால் மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகள் அரியலூர், ஆந்திரா, திண்டுக்கல் போன்ற இடங்களில் இருக்கும் சிமெண்ட் உற்பத்தி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
நேற்று வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருக்கும் திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் இருந்து 27 டன் குப்பைகளும், ஓட்டேரியில் இருக்கும் மேலாண்மை கிடங்கில் இருந்து 25 டன் குப்பைகளும் லாரிகள் மூலம் திண்டுக்கல்லில் இருக்கும் சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவற்றை சிமெண்ட் தொழிற்சாலை எரிபொருளாக பயன்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.