பிரபல இசையமைப்பாளரான இமான் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் சகோதரர்கள் போல வலம் வந்த நிலையில் இருவரும் தற்பொழுது பிரிந்து இருக்கிறார்கள். இதற்கு காரணம் சிவகார்த்திகேயன் என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இந்த பிரச்சனைக்கு இதுவரை சிவகார்த்திகேயன் வாய் திறக்கவே இல்லை . இமானின் முதல் மனைவி சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசி பேட்டி கொடுத்திருந்தார். அதன் பின்பு சிவகார்த்திகேயன் எந்த ஒரு பிரச்சனையும் நடக்காது போல தன்னுடைய குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் பிஸ்மி கூறியுள்ள தகவல் அனைவரையும் தற்போது மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அவர் கூறுகையில், இமான் குடும்பத்தில் சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை முதலில் வெளி கொண்டு வந்தது நான் தான். ஆனால் இதனை சிவகார்த்திகேயன் இன்னும் ஏன் மறுக்கவில்லை. சிவகார்த்திகேயன் இமான் விவகாரத்தில் ஆதாரத்தை நானே கண்ணால் பார்த்திருக்கிறேன் என்று அதிர்ச்சி அடைய வைத்துள்ளார். இவர் இப்படி கூறியிருப்பதை பார்த்த ரசிகர்கள் அப்படி என்ன ஆதாரமாக இருக்கும் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.