திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் ஆளுநர் திரு.ஆர்.என். ரவி அவர்களே, தமிழக முதல்வர் திரு.எம்.கே. ஸ்டாலின் அவர்களே, மத்திய அமைச்சர் அவையின், என் சகாவான, திரு. ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, இந்த மண்ணின் மைந்தரான டாக்டர். எல். முருகன் அவர்களே, தமிழக அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை, மேலும், தமிழ்நாட்டின் என் குடும்பச் சொந்தங்களே, வணக்கம்.

எனது தமிழ் குடும்ப உறவுகளே முதலில் உங்கள் அனைவருக்கும் 2024 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 2024 ஆம் ஆண்டு அனைவருக்கும் அமைதியானதாகவும், வளமானதாகவும்  இருக்கட்டும். 2024 ஆம் ஆண்டுக்கான என்னுடைய முதலாவது பொது நிகழ்ச்சி, தமிழ்நாட்டில் நடப்பது என்பதை நான் என் பாக்கியமாக கருதுகிறேன்.

சுமார் 20000 கோடி மதிப்பிலான, இன்றைய வளர்ச்சி திட்டங்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சியை பலப்படுத்தும். சாலை வழிகள், ரயில் பாதைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், எரிசக்தி ஆற்றல் மற்றும் ஒரு பெட்ரோலிய குழாய் இணைப்பு  ஆகிய இந்த திட்டங்களுக்காக நான் உங்களுக்கு  என் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் பல திட்டங்கள் பயணிப்பதில் சுலப தன்மை, அதை ஊக்கப்படுத்துவதோடு ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என தெரிவித்தார்.