மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் 19 வயது மாணவி விதி பிரமோத். இவர் தான் தங்கியிருந்த குடியிருப்பின் 14 வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவரது சடலத்தை முதலில் பார்த்த குடியிருப்பின் வாட்ச்மேன் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த போலீசார் மாணவியின் அருகே தாள் ஒன்று கிடப்பதை பார்த்து எடுத்துள்ளனர்.

அதில் மன அழுத்தத்தினால் இத்தகைய முடிவை எடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.