தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 7ஆம் தேதி இன்று முதல் ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் ரேஷன் கடைகளில் மக்கள் பரிசு தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. அதனைப் போலவே ரேஷன் கடைகளில் குறிப்பிட்ட தேதியில் பொருள்களை பெற முடியாதவர்கள் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது.ஜனவரி 10 முதல் ஜனவரி 13ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.