
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் புகழ்பெற்ற அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் இங்கு தண்ணீர் விழுவதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் கனமழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
அதன் பிறகு டிசம்பர் 27-ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் பாபநாசம் சேர்வலாறு அணைகளில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரிப்பதால் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தற்போது மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அகஸ்தியர் அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.