
தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, கர்மவீரர் காமராஜர் ஐயா தன்னுடைய முதல் ஆட்சியில் எப்படி சமூக நீதி பண்ணுனாரு ? கோவிலுக்குள்ளே பட்டியலின சகோதர – சகோதரிகள் செல்லக்கூடாது என்று நிலை இருந்தபோது, எப்படி உடைத்தார் ? பட்டியலினத்தை சார்ந்த சகோதரர் பரமேஸ்வரனை அழைத்து வந்து, அவரை அறநிலையத்துறை அமைச்சராக உட்கார வைத்தார். பட்டியலினத்தை சார்ந்த ஐயா பரமேஸ்வரன் அவர்கள் நம்முடைய கர்மவீரர் காமராஜர் ஐயா மந்திரி சபையில் அறநிலையத்துறை அமைச்சர்.
எல்லாருமே போலீசை கையில் வச்சுப்பாங்க…. தனது கட்டுப்பாட்டில் வச்சுப்பாங்க. பிஜேபி மேல கேஸை போடு … சமூக வலைத்தளத்தில் போஸ்டிங் போட்டான் 3 மணிக்கு போய் தூக்கிட்டு வா…. அண்ணாமலை மேல 2 FIR போட்டு வை... என் மேல் 89 FIR போட்டாச்சு…. எப்பயாச்சு ஒருநாள் தட்டி தூக்கும் போது, இந்த கேஸ் எல்லாம் பயன்படும். அப்பப்ப போட்டுக்கோ…. இதற்குத்தான் காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள். எனவே காவல்துறையை விட்டே கொடுக்க கூடாது.
ஆனால் கக்கன் ஐயாவுக்கு காவல்துறையை அமைச்சர் கொடுத்தாங்க…. பட்டியலினத்திலிருந்து வந்த ஒரு மூத்த அமைச்சர் கக்கன் ஐயாவுக்கு அரசியல் அங்கீகாரம் கொடுத்தாங்க. அரசியல அங்கீகாரம் எங்கே செல்ல வேண்டுமோ, அங்கே கொடுத்தாங்க. இன்னைக்கு மைனாரிட்டி மைனாரிட்டி என கத்திட்டு இருக்காங்க….
லூர்தம்மாள் நாகர்கோவிலில் சார்ந்த ஒரு மீன பெண்மணி. அவர்களை மீன்வளத்துறை அமைச்சராக கொண்டு வந்து அழகு படுத்தி, அன்னைக்கு மைனாரிட்டி சகோதரர்களுக்கு அங்கீகாரம் என்றால் என்ன என ? கர்மவீரர் காமராஜர் ஐயா சொன்னாங்க. ஆனால் இவங்க காமராஜர் ஐயாவுக்கு வச்ச பெயர் என்ன ? எருமை தோழன், மரம் ஏறி, உங்கள் ஓட்டு மரம் ஏறி மகனுக்கா ? இப்படி தானே கலைஞர் ஐயா சொன்னாங்க…
அப்படி இருந்தும் 1967 தேர்தலுக்குப் பிறகு நடந்த நாகர்கோவில் பாராளுமன்ற இடைத்தேர்தலில் காமராஜர் ஐயா வெற்றி பெற்ற போது…. கலைஞர் கருணாநிதி ஐயா என்ன சொன்னார்கள் ? நெல்லை எங்கள் எல்லை, குமரி எங்கள் தொல்லை என்று சொன்னார்கள். நெல்லையோடு எங்க எல்லை முடிஞ்சதுப்பா….. நாங்க குமரி எல்லாம் போக மாட்டோம் என சொன்னாங்க… ஆனால் இன்னைக்கு கன்னியாகுமரி அரசியல் பார்த்தீங்கன்னா…..
அப்படியே கன்னியாகுமரி மக்களே விருப்பப்படுவதாக இவர்கள் அரசியல் பண்ணிட்டு இருப்பாங்க. ஆக இதெல்லாம் நீங்கள் மக்களிடம் எடுத்து சொல்லணும். அந்த அளவுக்கு பொலிட்டிகள் நாலெட்ஜ் உங்களுக்கு இருக்கணும். அந்த அளவுக்கு நீங்கள் புத்தகம் படிக்கணும். இது போன்று தலைவர்கள் பேசுவதை கேட்கணும்….. நீங்க பேசுறதை நாங்க கேட்கணும்… மக்களிடம் எந்த விஷயத்தை எவ்வளவு சுலபமாக எடுத்து சொல்லணும் என தெரிவித்தார்.