
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நேற்று முதல் ரேஷன் கடைகள் மூலமாக ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேஷ்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க டோக்கன் கிடைக்காதவர்கள் ரேஷன் கார்டுடன் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பரிசு தொகை பெறலாம் என அரசு தெரிவித்துள்ளது. குளறுபடி செய்தால் ரேஷன் அட்டைதாரர்கள் 1967, 1800 425 5901 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.