கடகம் ராசி அன்பர்களே,
இன்று துணிச்சலுடன் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் தன வரவு எதிர்பார்த்த அளவில் கிடைப்பதில் சிக்கல் இருக்கும். எந்த பிரச்சினையும் சமாளித்து விடுவீர்கள். ஏமாற்றங்கள் கொஞ்சம் ஏற்படலாம். சில இடங்களில் கவனமாக இருப்பது நல்லது. பயணங்கள் செல்லும் போது கவனமாக சென்று வர வேண்டும்.
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். தொழில் வியாபாரத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். திட்டமிட்டு செயல்பட்டால் காரிய வெற்றி ஏற்படும். வியாபாரம் தொடர்பாக அலைச்சல்கள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். இறைவன் அருளால் எல்லாம் சாத்தியமாகும்.
நட்பால் நல்லது நடக்கும். பிரச்சினைகளை துல்லியமாக கையாளுவீர்கள். பெண்களுக்கு இன்று பணி சுமை அதிகரிக்கும். சிலரிடம் பார்த்து பக்குவமாக பேச வேண்டும். உறவினர்களால் ஏற்பட்ட விரிசல் குறையும். கோபமான பேச்சை தவிர்க்க பாருங்கள். இன்று மாணவர்கள் வீண் அலைச்சலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.
விளையாடும் போது கவனமாக இருங்கள். முயற்சி செய்தால் வெற்றி ஏற்படும். இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்: மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்