இந்தியாவில் பிரதமர் மோடி, நடிகைகள் ராஷ்மிகா மற்றும் கஜோல் ஆகியோரை deepfake மூலம் தவறாக சித்தரித்த வீடியோ நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த விவகாரம் சமூக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வீடியோக்களை தடுக்க, குழு ஒன்றை நியமித்து கண்காணிக்க x நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்காக அமெரிக்காவில் அலுவலகம் ஒன்றை நிறுவ முடிவு செய்துள்ள X நிறுவனம், 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை நியமித்து தகாத வீடியோக்களை உடனடியாக நீக்க திட்டமிட்டுள்ளது. முன்னதாக, அமெரிக்க பாடகி டேலர் ஸ்விஃப்ட்டின் DeepFake வீடியோ x தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.