
என் மண், என் மக்கள் யாத்திரையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுககாரங்கள் யாராவது மோடி ஐயா மீது குற்றச்சாட்டு வைக்க வேண்டும் என்றால், மோடி அவர்கள் ஹிந்தி திணிக்கிறார் என்ற குற்றச்சாட்டு வைக்க கூடாது. மோடி ஐயா இந்தியா முழுவதும் தமிழை திணிக்கின்றார் என்ற குற்றச்சாட்டை வைக்க வேண்டும். தமிழை படி என சொல்ல்கிறார். திருக்குறளை படிக்கச் சொல்கிறார்,கம்பராமாயணத்தை படி என சொல்லுறாரு.
யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று எங்க போய் பேசுகிறார் என்றால் ஐநா சபையில் போய் பேசுகிறார். இப்படிபட்ட அற்புதமான மனிதர். நம்முடைய கலாச்சாரத்தை தூக்கிப் பிடிக்கக் கூடிய தலைவர். திமுககாரங்க இருக்காங்க… இவுங்க தான் தமிழை வளர்த்திருக்கிறார்கள்.
அடுத்த முறை திமுக MLA, அமைச்சர் வந்தால் 10 திருக்குறளை சொல்ல சொல்லுங்கள். 70 வருஷமா நமது தாய்மொழியை வைத்து அரசியலை ஓட்டி விட்டீர்களே…. பத்து திருக்குறளை பிழையில்லாமல் சொல்லுங்கள் என்றால், யாரும் சொல்ல மாட்டார்கள், தெரிந்து ஓடி விடுவார்கள்.
நீங்க இந்த கேள்வியை கேட்காதீர்கள்…. நீங்கள் கேட்டால் இந்த தொகுதி பக்கம் வரமாட்டார்கள். இவர்கள் தமிழை வளர்த்ததையும் நாம் பார்த்தோம். பாரத பிரதமர் அவர்கள் நம் தாய் மொழியை வளர்க்கின்றதையும் பார்க்கின்றோம் என பேசினார்.