
SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எந்த தேர்தல் வந்தாலும்…. அது நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி…. சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி…. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற கட்சி அண்ணா திமுக கட்சி என்பதை இந்த நேரத்திலே குறிப்பிட விரும்புகிறேன்.
அதோடு விடியா திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று இரண்டரை ஆண்டு காலமாகிறது. இந்த இரண்டு அரை ஆண்டு காலத்தில் மக்களுக்கு இந்த ஆட்சியில் என்ன நன்மை கிடைத்தது ? எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை அன்றாட நிகழ்வாக தொலைக்காட்சியிலும், ஊடகத்தில் பார்க்கிறோம். எங்கு பார்த்தாலும் போதை பொருள் விற்பனை. இளைஞர்கள், மாணவர்கள் சீரழிகின்ற காட்சியை பார்க்கிறோம். இதுதான் இந்த ஆட்சியினுடைய சாதனை.
எதற்கெடுத்தாலும் திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள். இங்கு நடக்கின்ற சம்பவத்துக்கும் திராவிட மாடல் ஆட்சி தான் சாட்சி. அதோடு விலைவாசி உயர்ந்துவிட்டது…. இந்த ஆட்சியில்…. விடியா திமுக ஆட்சியில் நாற்பது சதவீதம் விலைவாசி உயர்ந்துவிட்டது…. அதோடு மின்கட்டணம் உயர்வு 52% மின் கட்டண உயர்வு…. வீட்டு வரி நூறு சதவீதம் உயர்வு…. கடை வரி 150 சதவீதம் உயர்வு…. இங்கிருக்கின்ற சிறுபான்மை மக்கள் பெரும்பாலும் தொழில் செய்துதான் வாழ்கிறார்கள்.
அப்படி தொழில் செய்து வாழ்கின்ற இந்த மக்களுக்கு மின் கட்டணம் உயர்வு, வீட்டு வரி உயர்வு, கடை வரி உயர்வு. எப்படி தாக்குபிடிக்க முடியும் ? ஆகவே இரண்டரை ஆண்டு கால ஆட்சியிலே மக்கள் கண்ட பலன் என்ன ? வேதனை தான் அவர்கள் கண்ட பலன். துன்பம் தான் அவர்கள் கண்ட பலன். ஆகவே இந்த ஆட்சி எப்போது போகும் என்று மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.