ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வரும் நிலையில் இன்று பிப்ரவரி 1ஆம் தேதி வர்த்தக சிலிண்டர்களின் விலை 12.5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று வரை 1924.50 ரூபாய் என விற்பனையான வர்த்தக கேஸ் சிலிண்டர்கள் இன்று முதல் 1937 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை மாற்றம் இல்லாமல் 918.50 ரூபாயாக விற்பனையாகிறது.