
அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய்க்கு ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்ச மற்றும் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்..
நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்று புதிய கட்சியை தொடங்கியுள்ளார். நடிகர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை மூலம் அறிவித்துள்ளார். அதோடு 2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை எனவும் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலே இலக்கு எனவும் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் கட்சியின் பெயரை அறிவித்தவுடன் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அனைத்து மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி வருகின்றனர்.
இதையடுத்து நடிகர் விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள் என ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில், நடிகர் விஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், அரசியலுக்கு வந்ததற்காக. உங்கள் புதிய அத்தியாயத்திற்கு அனைத்து நல்வாழ்த்துக்களும்” என தெரிவித்துள்ளார்.
அதேபோல புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
My heartfelt congratulations to @actorvijay for entering politics. All the best for your new chapter.
#ThalapathyVijay𓃵— Namal Rajapaksa (@RajapaksaNamal) February 2, 2024