![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/02/82108147-2b23-4d60-af10-c6e394dad4d4.jpg)
4 நாட்களுக்கு முன்னர் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்த விபத்தில் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மாயமானார். கார் ஓட்டுநர் பலியான நிலையில், வெற்றி துரைசாமியின் நண்பர் தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து உடல் பாகம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாறை இடுக்கில் கிடைத்தது வெற்றி துரைசாமியின் மூளையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள இன்று DNA பரிசோதனை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர்.