
கர்நாடக அரசாங்கது க்ருஹ ஜோதி திட்டத்தின் கீழ் பொதுமக்களுடைய வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரத்தை வழங்கி வருகிறது. வாடகை வீட்டுக்காரர்கள் புதிதாக ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டுக்கு செல்லும் பொழுது க்ருஹ ஜோதி திட்டத்தின் கீழ் பதிவு செய்து இலவச மின்சார வசதியை பெற்று வருகிறார்கள் .அவர்கள் வீட்டு காலி செய்து செல்லும்பொழுது புதிய வீட்டில் மின் இணைப்போடு ஆதார் இணைத்து இலவச மின்சாரத்தை பெற என்ன செய்வது என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர் .
அதாவது ஏற்கனவே பழைய வீட்டின் மின் மீட்டரோடு ஆதார் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில் அதை நீக்கி புதிய வீட்டின் மின் மீட்டரோடு ஆதார் எண்ணை இணைப்பது கடினமாக உள்ளது. இந்த நிலையில் ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு செல்லும் போது க்ருஹ ஜோதி திட்டத்தின் இணையதள பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை நீக்கி புதிய வீட்டின் மின் மீட்டரோடு ஆதாரை இணைத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக அமல்படுத்துமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.