
தமிழக பட்ஜெட்டில் இடம்பெறும் 7 சிறப்பம்சங்கள் குறித்து தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நாளை தாக்கலாக உள்ள நிதிநிலை அறிக்கையில் இடம் பெற உள்ள 7 முக்கிய அம்சங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவையில் நாளை தாக்கலாக உள்ள நிதிநிலை அறிக்கையில் மாபெரும் 7 தமிழ்க்கனவு இடம்பெறுகிறது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதில், சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழி பயணம் மற்றும் தாய் தமிலும் தமிழர் பண்பாடும் உள்ளிட்ட தலைப்புகளில் அறிவிப்புகள் வெளியாகிறது.
Grand 7 Tamil Dream STAY TUNED FOR BUDGET ANNOUNCEMENTS… #CMMKSTALIN | #TNDIPR | #TNBudget2024| #TNInclusiveBudget |@CMOTamilnadu @mkstalin @mp_saminathan @TThenarasu pic.twitter.com/A1W4nfpEY8
— TN DIPR (@TNDIPRNEWS) February 18, 2024