ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு முட்டாள் நம் திரையுலகைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி மிகவும் கேவலமாக பேசியதாகக் கேள்விப்பட்டேன். நான் அவரின் பெயரையோ, அவர் அவதூறு பரப்பியவர் பெயரையோ குறிப்பிட விரும்பவில்லை. நீங்கள் செய்த காரியம் மிகவும் அருவெறுப்பான ஒரு செயலாகும். நடிகர் சங்கத்தின் பொது செயலாளராக நான் இந்த கண்டனத்தை தெரிவிக்கவில்லை.

ஒரு சக மனிதனாக சக நடிகனாக இந்த கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். பிரபலங்களை குறிவைத்து அவதூறு பரப்பி பணம் சம்பாதிக்கும் செயல் தற்போது ஒரு ட்ரெண்டாக மாறிவிட்டது என நடிகர் விஷால் ஏ.வி. ராஜுவுக்கு எதிராக தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.