பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் ஐ ஜே கே தலைவர் பாரிவேந்தர் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று இது தொடர்பாக பேசிய அவர், பாஜக கூட்டணியில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளேன். பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளை பாஜகவிடம் கேட்டுள்ளோம். தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி இருப்பதால் விரைவில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறியுள்ளார்.

புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் போல பாஜகவின் தாமரை சின்னத்திலேயே இருவரும் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் பாரிவேந்தர் போட்டியிட்டு  வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.