மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பல மாதங்களாகவே கலவரம் நீடித்து வந்தது. இதனையடுத்து கலவரம் சற்று தணிந்திருந்த நிலையில் தற்போது இந்த சம்பவத்தின் காரணமாக அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கலவரத்தில் துப்பாக்கியுடன் வந்த 200 பேர் கொண்ட கும்பல் காவல் அதிகாரியை கடத்திச் சென்றுள்ளது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்படவே கடத்தப்பட்ட காவலரை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கலவரத்தை கட்டுப்படுத்த மீண்டும் இந்திய ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.