கார் விபத்தில் சிக்கிய காங்கிரஸ் மாநில செயலாளர் கௌரி கோபால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு தமிழ்நாடு காங்., தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். ‘கௌரி கோபால் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவரது மரணம் காங்., பேரியக்கத்திற்கு பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்