ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு உட்பட 69 நோய்களின் மருந்துகளுக்கான விலை உச்சவரம்பை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது. மருந்து விலை கட்டுப்பாட்டு உத்தரவு 2013 இன் படி நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு (ஜிஎஸ்டி நீங்கலாக) விலையை விட கூடுதல் விலையில் விற்பனை செய்யப்பட்டால் மருந்து நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.