
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிடப் போவதாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜகவுடன் கை கோர்த்திருக்கிறோம். இதன்மூலம் ஒற்றுமையுணர்வு ஓங்கி, நாடு வளம் பெறும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.