தமிழக காவல்துறையில் உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டு துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு வருகின்ற ஜூன் மாதம் வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை எவ்வளவு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தேர்வுகள் அனைவரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

இந்த தேர்வுக்கு ஏதாவது ஒரு பிரிவியில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இந்த தேர்வு குறித்த விவரங்களை http://tnusrb.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.