
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மோடி மீண்டும் பிரதமர் ஆனால் அமைதியான இந்தியா அமளியான இந்தியவாக மாறிவிடும் என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
தமிழர்களை தீவிரவாதிகள் ஆகவும் பிச்சைக்காரர்களாகவும் பாஜகவினர் சித்தரிப்பதாக குற்றம் சாட்டிய அவர், தமிழர்களை வெறுக்காத பிரதமர் வேண்டும் என்றால் பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் பாஜகவுக்கு தமிழக மக்கள் வாக்களிப்பது அவமானமான செயல் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.