
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பாஜகவை கண்ட திமுகவும் அதிமுகவும் அஞ்சுவதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பூ விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், தேர்தலில் பாஜக யாரையும் போட்டியாக பார்க்கவில்லை. ஆனால் பாஜகவை திமுகவும் அதிமுகவும் போட்டியாக பார்க்கின்றன. தமிழ்நாட்டில் பாஜக இல்லவே இல்லை எனக் கூறிய திமுகவும் அதிமுகவும் இன்று பாஜகவை கண்டு அஞ்சுகின்றன. அந்த அளவுக்கு பாஜக வளர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்