
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் அண்ணாமலை ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியிருக்கிறார். அப்போது அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இருந்தன.
தற்போது இரு கட்சிகளும் தனித்தனியே தேர்தலை சந்திக்கின்றன. தற்போது இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி வரும் நிலையில் ஆயிரம் ரூபாய் கொடுத்தும் மக்கள் உங்களுக்கு ஓட்டு போடவில்லை என்று செல்லூர் ராஜு பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.