
மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக ஓபிஎஸ் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகின்றார். அங்கு வாக்கு சேகரிப்பின் போது அவர் பேசுகையில், எனக்கு சின்ன ஒதுக்குவதில் தாமதம் ஏற்படுத்துவதாக எனது பெயரைக் கொண்டு ஐந்து பேரை நிறுத்தி உள்ளனர்.
நான் எந்த சின்னங்களை குறிப்பிட்டு இருந்தேனோ அதே சின்னங்கள் அந்த ஐந்து வேட்பாளர்களும் கேட்டிருந்தனர். அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக செயல்பட்டனர். என்னை சுற்றி எதிரிகள் சதி செய்து கொண்டு வருகின்றனர். இறைவன் அருளால் நமக்கு கிடைத்த வெற்றி சின்னம் பலாப்பழம் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.