
இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள் அனைவரும் பயன் பெரும் விதமாக உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. அதேசமயம் கேஸ் அடுப்பு வழங்கப்படும் நிலையில் பிபிஎல் கார்டு வைத்திருக்கும் பெண்கள் மட்டுமே இந்த திட்டத்தின் பலன்களை பெற முடியும்.
இந்தத் திட்டத்தினை பெறுவதற்கு பெண்கள் ஏற்கனவே கேஸ் இணைப்பு வைத்திருக்கக் கூடாது. இதற்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். www.pmuy.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உங்களுக்கு பிடித்தமான கேஸ் ஏஜென்சியில் கொடுத்து பயன்பெறலாம்.