தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் தேர்தல் விதிமுறைகள் இன்னும் நடைமுறையில் தான் உள்ளன. இதன் காரணமாக எந்த நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் நடத்துவதற்கு முன்பாக அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். வருகின்றமே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினத்தை கொண்டாட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அனுமதி கோரிய நிலையில் தேர்தல் அதிகாரியின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.