
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கரம்பக்குடி பகுதியில் அஞ்சுதா (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த வருடம் பெங்களூருவைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர் மலேசியாவில் பல் மருத்துவராக இருக்கிறார். இந்நிலையில் அஞ்சுதா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் மகப்பேறு விடுமுறையில் இருந்தார்.
அவருக்கு நேற்று முன்தினம் திடீரென வயிறு வலி ஏற்பட்டதோடு மூச்சு திணறலும் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அவரை அவர் பணிபுரிந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. இதைத்தொடர்ந்து கருப்பை குழாயில் ரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டதால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தைகள் இருவரும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் தான் பணிபுரிந்த மருத்துவமனையிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.