ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது.  கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் துணை கேப்டனாக தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடதால் அவரை இந்திய அணியில் தேர்வு செய்யக்கூடாது என முன்னாள் வீரர்கள் பலரும் கூறினார்கள். ஆனால் தற்போது ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாக நியமித்ததால் அதற்கு பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி 7 தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறது. இதனால் ஹர்திக் பாண்டியா இது விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தது குறித்து தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இதுவரை துணை கேப்டன் பதவியை பற்றி எதுவும் விவாதிக்கவில்லை. மும்பை அணியில் இதுவரை நடைபெற்ற எல்லா போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளார்.

நம்முடைய முதல் போட்டி ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. பிட்டாக இருக்கும் வரை பாண்டியா செய்யக்கூடிய வேலையை மாற்று வீரர்களால் செய்ய முடியாது. அவர் காயத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து விளையாட வந்துள்ளார். எனவே பவுலிங் உட்பட அவர் தன்னுடைய ஆட்டத்தில் சிறப்பான முறையில் விளையாடுவார் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறியுள்ளார். மேலும் ஹர்த்திக் பாண்டியாவுக்கு நிகரான மாற்று வீரர் இல்லை என்பதாலேயே அவரை தேர்வு செய்துள்ளதாக கூறியுள்ளார்.