
தமிழகத்தில் நேற்று அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த நிலையில் வருகின்ற 28ஆம் தேதி வரை இருக்கிறது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறையின் முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார். அதன்படி கோடை விடுமுறையில் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் அந்த பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட போதிலும் சில பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது. எனவே கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை கட்டாயமாக நடத்தக்கூடாது. மீறி நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதில் அனைத்து கல்வி அலுவலர்களும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.