தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி 92.37% மாணவர்களும், 96.44 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன் பிறகு 12ஆம் வகுப்பு தேர்ச்சி முடிவில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. அதன்படி 97.45 சதவீதம் மாணவ மாணவிகள் திருப்பூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 397 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று ‌ சாதனை படைத்துள்ளது.