
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரயில்கள் மே 12 நாளை சிங்கப்பெருமாள் கோவிலுடன் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நாளை காலை 11.10 மணி முதல் பிற்பகல் 12.20 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுவதால் மே 12 கடற்கரையிலிருந்து காலை 9.25 மணி மற்றும் 10 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவையுடன் நிறுத்தப்படும்.
அதனைப் போலவே காலை 11.20 மற்றும் பிற்பகல் 12 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு புறப்படும் ரயில்கள் செங்கல்பட்டுக்கு பதிலாக சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் வசதிக்காக விசாகப்பட்டினம் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே இயங்கும் வாராந்திர அதிவிரைவு ரயிலில் மே 13 முதல் ஜூன் 11ஆம் தேதி வரை ஒரு கூடுதல் படுக்கை வசதி கொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.