பொதுமக்களின் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் முதுமை காலத்தை சமாளிக்கும் நோக்கத்தில் மத்திய அரசானது அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் முதியவர்களுக்கு 60 வயதில் நிரம்பிய பிறகு மாதம் ரூ‌.1000 முதல் ரூ‌.5000 வரை பென்ஷன் கிடைக்கும்.

இந்த திட்டத்தில் கணவன் மற்றும் மனைவி இருவரும் சேர்ந்து கணக்கு தொடங்கி பயன் பெறலாம். இந்த திட்டத்தில் 18 வயதில் கணக்கு தொடங்கி ஒரு நாளைக்கு ரூ.7 செலுத்த வேண்டும். அல்லது மாதம் ரூ.210 செலுத்த வேண்டும். இதைத்தொடர்ந்து 60 வயது பூர்த்தியாகும் போது மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் கிடைக்கும். இந்த திட்டத்தில் 18 முதல் 40 வயது இருப்பவர்கள் இணையலாம். மேலும் இந்த திட்டத்தில் கணவன் மற்றும் மனைவி இருவரும் முதலீடு செய்வதன் மூலம் மாதம் ரூ.10,000 பென்ஷன் கிடைக்கும்.