
பொதுவாக நம் வீட்டில் உள்ள மின்சாதனங்களின் கேபிள் இறுக்கமாக இல்லை என்றால் அதிக வோல்டேஜில் மின்சாரம் வரும்போது ஷாக் அடிக்கும். சில சமயங்களில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், லேப்டாப் போன்ற பொருட்களை வெறும் காலுடன் தொடும்போது ஷாக் அடிக்கலாம். இதற்கு காரணம் எர்த்திங் (Earthling) செய்யாமல் இருப்பதுதான்.
இதனால் மின் சாதனத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டாலும் அல்லது மின்சாரம் அதில் பாயும்போது தற்செயலாகா அதை தொட்டாலும் ஷாக் அடிக்கலாம். இந்த பிரச்சனையில் இருந்து தவிர்க்க வீட்டில் ஏசி மற்றும் பிரிட்ஜ் என எந்த மின்சாதன பொருட்களை மாட்டினாலும் எர்த்திங் செய்ய வேண்டும். குறிப்பாக வீடு கட்டும்போதே எர்த்திங் செய்துவிட்டால் பல பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம். மேலும் இல்லை எனில் வீட்டில் புதிய மின்சாதன பொருட்களை நிறுவும் போதாவது அதற்கு முன் எர்த்திங் செய்வது நல்லது.