ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி 16 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

இந்தப் போட்டி முடிந்த பிறகு மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தோல்விக்கான காரணம் குறித்து பேசியுள்ளார். அவர் எங்களுடைய பேட்டிங் யூனிட்டில் முதலில் நல்ல தொடக்கம் கிடைத்தாலும் அதை நாங்கள் சரியாக தக்க வைக்கவில்லை என்று கூறினார். நாங்கள் ஐபிஎல் தொடரின் ஆரம்பம் முதலே  நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றே நான் விரும்பினேன். ஆனால் நாங்கள் விரும்பிய முறையில் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அடுத்த போட்டி குறித்து எந்த யோசனையும் கிடையாது என்றும் கூறியுள்ளார்.