
ஐபிஎல் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டி இன்று மாலை தொடங்கிய நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த போட்டி முடிவடைந்த பிறகு சென்னை அணியின் ரசிகர்கள் மைதானத்தில் இருக்க வேண்டும் என சென்னை அணி நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது. சென்னை அணி ரசிகர்களுக்கு ஸ்பெஷலான ஒன்று காத்திருக்கிறது என அந்த அணியின் நிர்வாகம் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும் ஏற்கனவே எம்.எஸ். தோனி இன்று ஓய்வை அறிவிப்பார் என்று தகவல் பரவி வரும் நிலையில், சிஎஸ்கே அணியின் திடீர் ட்வீட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.