
ஐபிஎல் தொடரின் தற்போதைய புள்ளி பட்டியல் சுவாரஸ்யமான பல வாய்ப்புகளை முன்னிறுத்துகிறது. குறிப்பாக மே 18ஆம் தேதி நடைபெறும் CSK- RCB இடையேயான போட்டி Knock-out போட்டியாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இரண்டு அணிகளுக்கும் ஒரு போட்டி மட்டுமே மீதம் இருக்கும் நிலையில் கடைசி போட்டியை வெல்லும் அணி அடுத்த சுற்றுக்கு போகலாம். அல்லது இரண்டு அணிகளுமே ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போகவும் வாய்ப்புள்ளது.