ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய நிலையில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி 50-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. அதன்படி ஒரே மைதானத்தில் 50 வெற்றிகளை பெற்ற 3-வது அணியாக சிஎஸ்கே மாறியுள்ளது.

இதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி வான்கடே மைதானத்திலும், கொல்கத்தா அணி ஈடன் கார்டன் மைதானத்திலும் தங்களுடைய 52-வது வெற்றியை கொண்டாடி இருந்தனர். அந்த வரிசையில் தற்போது சிஎஸ்கே அணி 50-வது வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னை அணி வீரர்களுக்கு சிறப்பு பதக்கங்களை வழங்கியது. மேலும் அங்கிருந்த ரசிகர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.