இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் என்பது ஒரு முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். இந்த ஆதார் கார்டை பயன்படுத்தி தற்போது மோசடி வேலைகள் அரங்கேறி வருகிறது. எனவே ஆதார் கார்டு செயல்முறைகளை பொதுமக்கள் பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியம். அதற்கு உங்களுடைய தனிப்பட்ட ஆதார் விவரங்களை மற்றவர்களிடம் பகிரக்கூடாது.

அதன் பிறகு ஆன்லைனில் கடன் வாங்கும் போது ஆதார் கார்டை பயன்படுத்தவோ, தேவையில்லாத இடங்களில் ஆதாரில் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யவோ கூடாது. அதன் பிறகு ஆதார் கார்டு ஓடிபி நம்பரை யாரிடமும் பகிரக்கூடாது. ஆதாரிலுள்ள செல்போன் நம்பரை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருப்பது மிகவும் நல்லது. அதோடு பகுதி அளவு  மறைக்கப்பட்ட மாஸ்க் ஆதாரை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. மேலும் ஆதார் விவரங்களை சரிபார்க்க https://myaadhar OR uidai.gov.in என்ற இணையதளங்களை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.