
ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் தொடங்கும் நிலையில் தற்போது ஐபிஎல் போட்டியில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்ப இருக்கிறார்கள். அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் வில் ஜேக்ஸ் மற்றும் ரீஸ் டாப்ளி ஆகியோர் நேற்று சொந்த நாட்டுக்கு திரும்பினர்.
இதேபோன்று இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த நிலையில் அவரும் தாயகம் திரும்பியுள்ளார். இது இந்த இரு அணிகளுக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதேபோன்று சிஎஸ்கே அணியின் மொயீன் அலி, பஞ்சாப் அணி கேப்டன் ஷாம்கரன், விக்கெட் கீப்பர் பேர் ஸ்டோவ், ஆல் ரவுண்டர் லிவிங்ஸ்டன் ஆகியோரும் தாயகம் திரும்ப இருக்கிறார்கள். மேலும் கொல்கத்தா அணியில் விளையாடி வரும் பில் சால்ட்டும் இங்கிலாந்து திரும்ப இருக்கிறார். இது அந்த அணிகளுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.