செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்பட்ட இரு வேறு விபத்துகளில் 9 பேர் பலியான விவகாரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி சென்று திரும்பி நண்பர்கள் கல்பாக்கம் அருகே காரை மரத்தில் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். அதனைப் போலவே மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கணவரை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டு வீடு திரும்பிய போது மனைவியும் மகன்களும் உயிரிழந்தனர். ஒரே நாளில் நடந்த விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.