தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் செல்வராகவன். இவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்‌. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய முகம் குறித்து பேசிய ஒரு விஷயம் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து அவர் கூறியதாவது, சின்ன வயசுல என்னுடைய முகம் நல்லா இல்லன்னு கண்ணாடி பக்கம் கூட போக மாட்டேன். என்னுடைய மூஞ்சி நல்லா இல்லன்னு அம்மாகிட்ட சொல்லி ரொம்ப அழுவேன். அப்போது என்னுடைய அம்மா உனக்கு என்ன ராஜா மாதிரி இருக்கன்னு சொல்லுவாங்க. ஆனால் இன்று இயக்குனராக இருந்து ஒரு நடிகராக மாறியுள்ளேன். மேலும் இதனால் நீ கண்ணாடி முன்னாடி நின்று இனி தைரியமாக பார்க்கலாம் என்று என்னிடம் அம்மா கூறுவார் என்று கூறியுள்ளார்.