ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஐஸ்வர்யா ராய் தற்போது பாலிவுட் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தமிழில் கடைசியாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இவர் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் ஆராதியா என்ற ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகை ஐஸ்வர்யா ராய் தன் மகளுடன் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவர் கையில் கட்டு போட்டு இருந்தார். மேலும் இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.