எவரெஸ்ட் & எம்.டி.எச் மசாலா பொருள்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. இவற்றில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு ரசாயனம் இருப்பதாக கூறி அவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று அந்நாட்டு உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளைத் தொடர்ந்து இந்திய நிறுவனங்களுக்கு நேபாள அரசு தற்போது தடை விதித்திருப்பது பேசப்பொருளாகியுள்ளது.